Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை…!!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது.

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இதனால்  பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.  இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க, நீதிமன்றம் இந்த யோசனையை  தமிழக அரசிற்கு வழங்கியிருக்கிறது.

 

Categories

Tech |