சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்ட டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை மறித்து சுங்கச்சாவடி அலுவலர் கட்டணம் கேட்டபோது திடீரென லாரி சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சென்றது. இந்த டிராக்டரை தொடர்ந்து 13 டிராக்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சென்றது.
இந்த சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவர்களை மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர்கள் உடைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 13 டிராக்டர்களும் ஆக்ராவை சேர்ந்த மணல் மாஃபியாவுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் மணல் கடத்திய டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்து செல்லும் வீடியோவானது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.