Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு…. எங்கெல்லாம் தெரியுமா….? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சுங்கக் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. அதே போல இந்தாண்டும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளிவட்ட சாலையில் இயங்கி வரும் நான்கு சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்ன முல்லை வாயல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள சுங்க சாவடி வழியாக செல்லும் மூன்று சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தினசரி கட்டணம் ரூபாய் 5 லிருந்து ரூபாய் 22 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூபாய் 194 லிருந்து ரூ.1250 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |