உயர் அழுத்த மின் கோபுரம் மீது மோதிய விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி கோனேரிபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் நின்ற உயர் அழுத்த மின் கோபுரம் மீது லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.