Categories
தேசிய செய்திகள்

சுகாதார பணியாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். அப்போது சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாண்டனர். அதனால் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு உதவியை அறிவித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி கொரோனா நோய் தொற்று பாதிப்பைத் தடுக்க போராடும் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 22.12பட்சம் பொது சுகாதார பணியாளர்களுக்கு 90 நாட்களுக்கு காப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இன்னும் கோரோணா பிரச்சனை நீடிப்பதால் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு உதவி 180 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 1,351 கோரிக்கைகளுக்கு செட்டில்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலமாக நோய் பரவும் ஆபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் சுகாதார பணியாளர்களுக்கான இந்த காப்பீடு வசதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. எவ்வித தடையும் இல்லாமல் இந்த காப்பீடு உதவி கிடைக்கும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதை சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |