சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் வகிப்பதாக சுகாதார ஆணைய தலைமை நிர்வாகி அதிகாரி ஆர்எஸ் சர்மா கூறியுள்ளார். தமிழகம் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிலும் சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் எடுக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஒரு குடும்பம் 5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இது பல மாநிலங்களில் செயல்படுத்த பட்டாலும், தமிழகம் 2008ல் இந்த திட்டத்தை துவங்கி இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. இதனால் தற்போது சுகாதார கட்டமைப்பில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது என்று சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் சர்மா கூறியுள்ளார்.
Categories
சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில்…. “தமிழகத்திற்கு 2வது இடம்”…. ஆர்.எஸ்.சர்மா தகவல்….!!!!
