தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,900 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Categories
சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள்…. நவம்பர் 19ஆம் தேதிக்குள்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!
