தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி இடம் அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு துறையாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எனவே விரைவில் இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.