தமிழகத்தில் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குடும்பம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையத்தில் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர்.
இந்நிலையில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஜாதி குறித்த வகுப்புவாரி பிரிவு விவரம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் ஜாதி பெயர் இடம் பெற்றதாகவும் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டும் எந்த பதிவும் அரசு தரப்பில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.