சீரம் நிறுவனத்தின் தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மாடியில வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், பலியானோருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் தீய விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.