நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்காக ஒரு வழித்தலமாக தான் தேர்தலை நாம் தமிழர் கட்சி பயன்படுத்துகிறது என துரைமுருகன் பேசினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன், சீமான் யாரு அப்படியென்று ஒருவர் கேட்டுள்ளார். நான் தேவர் என்றும், நாடார் என்றும், பள்ளர் என்றும், பறையர் என்றும், செட்டி என்றும், முதலி என்றும், கவுண்டர் என்றும் திரிந்து கொண்டிருந்த எங்களை போன்ற தமிழ் பிள்ளைகளை நாங்கள் தமிழன் என்று சொல்ல வைத்தவர் அண்ணன் சீமான். அஜித்க்கு பின்னாலும், விஜய்க்கு பின்னாலும், ரஜினிகாந்த் பின்னாலும், கமலஹாசன் பின்னாலும் சென்ற என்னை போன்ற இளைய பிள்ளைகளை தலைவர் பிரபாகரன் பின்னால் செல்ல வைத்தவர் எங்கள் அண்ணன் சீமான்.
யாரு சீமான் ? திராவிடத்தின் பின்னாலும், இந்திய தேசத்தின் பின்னாலும், காங்கிரஸ் பின்னாலும், பாஜக பின்னாலும் சென்ற இளைஞர்களை தமிழ் தேசத்தின் பக்கம் 30 லட்சம் தமிழ்நாட்டு மக்களை திருப்பியவர் அண்ணன் சீமான். யாரு சீமான்? சந்தோஷ் என்ற பெயரை மகிழன் என்றும், சதீஸ் என்ற பெயரை துருவன் என்றும் தமிழில் பெயரை வைப்பது அவமானமல்ல தமிழ் எங்கள் அடையாளம் என்று உணர வைத்தவர் எங்கள் அண்ணன் சீமான். யாரு சீமான் ? துபாய் போன்ற தேசங்களில் வெளிநாடுகளில் ஒட்டகம் மேய்த்து கொண்டிருந்தவர்கள்ளை 30,000, 40,000 ரூபாய்க்கு ஒட்டகம் மேய்க்க கூலியாக சென்றவர்களை விவசாயம் செய்ய வைத்து அவர்களையும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வைத்து விவசாயம் பார்ப்பது அவமானம் அல்ல அது வருமானம் என்று உணர வைத்தவர் எங்கள் அண்ணன் சீமான்.
யாரு சீமான் ? பீகாரில் இருந்து பிழைக்க வந்த ஒத்தவீடு பாப்பான் கேட்கிறான். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கக்கூடிய அண்ணன் சீமானை யாரு என்று ? எங்களுடைய தாய் மலையாளி என்று சொல்கிறார்கள். ஏன் மலையாளி என்று சொல்கிறார் ? சீமான் மலையாளி, செபஸ்டியன் சைமன் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டுமென்று சொல்கிறபோது, யாரெல்லாம் தமிழர் இல்லையோ அவர்களுக்கு வலிக்கிறது. யாரெல்லாம் தமிழர் இல்லையோ அவர்களுக்கு வலிகின்ற போது அந்த தத்துவத்தை சொன்னவனையே தமிழன் இல்லை என்று சொல்லி விட்டால் அந்த தத்துவம் முடிந்து போய்விடும் அதற்காக சொல்லப்படுகிறது. அதனாலே மலையாளி என சொல்கிறார்.
சிவகங்கை அருகே அரணியூரில் அதை கேட்டுட்டு, இதை சொல்ல சொல்லி விட்டு நீ வெளியே வந்துரு அதுக்கு அப்புறம் பார்ப்போம். நீங்க சொன்னது சிவகங்கை அரணியூரில் போய் சொல்லு. எங்கள் அம்மா களை பறிக்குற அரிவாளை பத்திரமாகத்தான் வைத்துள்ளார்கள். இன்றைக்கு இந்த சொல்லை சொல்லிவிட்டு நடமாட முடியுது ? ஐயா வைரமுத்து அவர்களை பேசிவிட்டு தமிழ்நாட்டில் நடமாட முடிகிறது. அண்ணன் சீமானை சொல்லிவிட்டு நடமாட முடிகிறது, அதுதான் நம்முடைய ஜனநாயகம். நாம் மனிதனாக இருக்கின்றோம். அதனால் அவர்கள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை இந்த ராதாபுரத்தில் மூன்று வேட்பாளர்களை மிரட்டி திமுக வெளியேற வைத்திருக்கிறார்கள். மிரட்டி வாபஸ் வாங்க வைத்து இருக்கிறார்கள். அப்போ எவ்வளவு பயம் என்று பாருங்கள். நாம் தமிழர் கட்சியின் ஒரே ஒரு கவுன்சிலர் திமுகவில் இணைந்தார். ஒரு கவுன்சிலரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்குகின்றாய் என்றால் நாம் தமிழர் கட்சியின் பவர் என்ன ? நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு என்ன ? அதை ஒரு பெரிய செய்தியா போட்டார்கள். ஒரே ஒரு கவுன்சிலர் சேர்ந்தார்.
இன்றைக்கும் ஒரே ஒரு கவுன்சிலர் நாளைக்கு ஒட்டுமொத்த கவுன்சிலரும் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலரும் நாங்க தான் இருக்கப் போகிறோம். ஒரு தம்பி சொன்னான், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுகிறார்களோ, இல்லையோ. ஆனால் நாம் தமிழர் கட்சி சின்னம் என்ன ? நாம் தமிழர் கட்சியின் தத்துவம் என்ன ? என்று சொல்வதற்காக தான் வேட்பாளராக நிற்கிறேன். ஓட்டு போடுவது முக்கியமில்லை, நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்காக ஒரு வழித்தலமாக தான் தேர்தலை நாம் தமிழர் கட்சி பயன்படுத்துகிறது என துரைமுருகன் பேசினார்.