பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மல்லை சத்யா தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,அண்ணன் பொழிலன் அவர்கள் எப்படிப்பட்ட தியாக மறவர் என்பதை நாடு அறியும். அவருடைய தந்தையார் செய்திருக்கின்ற சாதனைகளை வரலாறு மறக்காது. அப்பேற்பட்ட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் இங்கே இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரையும் அச்சுறுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அண்ணன் பொழிலன் அவர்கள் தனி மனிதர் அல்ல அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அவர் எப்போதும் சொல்லவில்லை.
அவர் அதை சொல்வதில் பெருமிதம் கொள்ளவில்லை.மாறாக இந்த கூட்டத்தில் அவரும் ஒருவரும் என்பதை நீ மறந்து விடக்கூடாது. நாயை கல்லை தூக்கி அடித்தால் நாய் காலை தூக்கி கொண்டு ஓடிடும். ஆனால் தேனி கூட்டத்தில் கல் எடுத்து அடித்து பாருங்கள் அடித்தவன் எங்கு இருக்கிறார் என்று சொல்லமுடியாது பின்னங்கால் பிடரியில் பட ஓடுவான். அதுபோல இங்கு நாங்கள் எல்லோருமே இப்போது ஜனநாயக வழியில், அறவழியில் நீதி கேட்பதற்காக நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.
இந்த நிதியை தமிழக அரசு தரவேண்டும் அண்ணன் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். எனவே தான் இந்தக் கருத்தியலில் ஜனநாயக சக்திகளாக இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடாத இந்த அமைப்போடு இணைந்து கரம் கோர்ப்போம் என்று சொன்னால் இந்த நாடு ஒரு அமைதி பூங்கா வன்முறை அரசியலை கையில் எடுக்கக்கூடாது என்ற வேண்டுகோளை வைப்பதற்காக நாங்கள் இங்கு ஒன்று திரண்டுள்ளோம் என தெரிவித்தார்.