சீமான் யாரு ? சீமான் அம்மா முதலில் தமிழச்சியா ? அந்த அம்மா தமிழா ? என்ன பீகாரி என்கின்றான் ஒரு முட்டாள் , நான் பச்சை தஞ்சாவூரான் என ஹெச்.ராஜா ஆவேசமாக பேசினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழ் பேசத் தெரியாத சில பேர் தமிழன் என சொல்லிட்டு இருக்கீங்க. ஹிந்துவும் தமிழும் வெவ்வேறு என்று சொன்னது யாரு?
ஹிந்து இல்லன்னா தமிழ் எங்க வந்தது ? தமிழ் வேற… ஹிந்து வேற என்று சொல்லக்கூடிய அளவிற்கு அனைவரும் மதமாற்றத்துக்கு துணை போகிறீர்கள், துணை போக வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
சீமானின் அம்மா முதலில் தமிழச்சி யா ? அந்த அம்மா தமிழா ? அவங்க ஒரு மலையாளி. அப்புறம் என்ன பேசுறீங்க ? என்ன பீகாரி என்கின்றான் ஒரு முட்டாள். பச்ச தஞ்சாவூரான். ஆரியன் எங்க வந்தா ? என்ன ஆதாரம் இருக்கு ? யாராவது ஒருத்தர் சொல்லுங்க. சுபவீரபாண்டியன் அறிவாலயத்தில் வாசல்ல உட்கார்ந்து இருக்கிற பிச்சைக்காரன் என ஹெச்.ராஜா கடும் சொற்களால் விமர்சித்தார்.