சீமானை அவமதித்ததாக ரவிக்குமார் மீது அவதூறு பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார் ரவிக்குமார்.
பிரபல இயக்குனரான ரவிக்குமார் “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்நிலையில் சீமானை அவமதித்து பேசியதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்த நிலையில் அதை மறுத்து ட்விட்டரில் ரவிகுமார் கூறியுள்ளதாவது, “நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியது இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்து கொள்பவன் அல்ல. நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிகப்பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மாநாடு பட பூஜை. நடிகர் சங்கம் எதிரில், சீமானும் சேரனும் உங்களிடம் பேசியது பொய்யா? பக்கத்திலிருந்த நான் பொய்யா? இதோ இந்த பதில் பொய்யா?
— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) March 17, 2022
மேலும் “மாநாடு பட பூஜை. நடிகர் சங்கம் எதிரில், சீமானும் சேரனும் உங்களிடம் பேசியது பொய்யா? பக்கத்தில் இருந்த நான் பொய்யா இதோ இந்த பதில் பொய்யா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.