Categories
அரசியல்

சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது பண்ணுங்க…. கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதால் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து  பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய கே.எஸ் அழகிரி, தைரியம் இருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடரட்டும், கைது செய்யட்டும், சிறைக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று காவல்துறைக்கு சீமான்  தொடர்ந்து சவால் விட்டு பேசி வருகிறார். எனவே சீமான் மீது தமிழக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |