Categories
மாநில செய்திகள்

சீன போன்களை overtake பண்ணிய பிரபல ஸ்மார்ட் போன்கள்…. சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் செல்போன் விற்பனையில் சாம்சங்க்  அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஈ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சியான சலுகைகளை வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பண்டிகை கால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. அதிலும் ஆஃபர் அதிகம் உள்ள நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஜெட் வேகத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்த சர்வே எடுக்கப்பட்டது. அதில் வாடிக்கையாளர்கள் சாம்சங்க்  நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை மிகவும் விரும்பி வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன்களும் அதுவாகும்.

இந்நிலையில் samsung முன்னணி ஸ்மார்ட் போன்கள் நிறுவனங்களில் ஒன்று. மேலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை  விற்பனையில் அதிக பங்கையும்  கொண்டுள்ளது. அதன் பின்னால் Xiaomi மற்றும் realme நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விற்பனை உள்ளது. பண்டிகை கால விற்பனையில் சாம்சங்க்  26 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் 33 லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட் களை சாம்சங் விற்பனை செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் சாம்சங் இன் கேலக்ஸி எக்ஸ் 21 எப்பி, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி இஸட் 3 ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் Xiaomi மற்றும் realme பண்டிகை விற்பனையில் மூலம் 3  தரவரிசையில்  இடம் பிடித்துள்ளது. விற்பனையின் போது இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பங்கு முறையை 20 சதவீதம் மற்றும் 17 சதவீதமாக இருந்தது. ஆனால் சியோமியின் 25 லட்சம் யூனிட்களும், ரியல்மியின் சுமார் 22 லட்சம் யூனிட்களும் வாங்கப்பட்டது. ஆனால் பண்டிகைகளை முன்னிட்டு பெரிய அளவில் தள்ளுபடி இருந்த போதிலும் ஆப்பிள் போனை மக்கள் அதிகம் வாங்க விரும்பவில்லை. இது தவிர பண்டிகை விற்பனையில் பிற நிறுவன ஸ்மார்ட்போன்களின் பங்கு 38 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு சதவீதம் குறைவான ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

Categories

Tech |