ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வெளியாகிய திரைப்படம் ஆர் ஆர் ஆர். உலகளாவிய பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு சீனாவிலுள்ள உலகின் மிகப் பெரிய டிஎல்சி ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு இருக்கிறது. சீனமொழியில் டப் செய்யப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் இப்படம் வெளியாகியுள்ளது.
அத்துடன் இத்திரையிடலில் இயக்குனர் ராஜமவுலியும் பங்கேற்றதோடு அங்கு நடதஜ கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் உரையாடி இருக்கிறார். அதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி -2, ஈகா, மகதீரா, மரியாத ராமண்ணா ஆகிய படங்களும் அடுத்தடுத்து சீனாவிலுள்ள இந்த ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.