சீனியர் சிட்டிசன்களுக்காக ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்க்கான திட்டங்களில் சீனியர் சிட்டிசன்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பானவையாகும். ஆனாலும் கொரோனாவின் காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டங்களுக்கான வட்டி மிக கடுமையாக குறைந்து உள்ளது. இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மற்றும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி வருமானம் மிகவும் குறைந்துள்ளது.
எனவே சில வங்கிகள் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக, ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை சீனியர் சிட்டிசன்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி எஸ்பிஐ, ஐசிஐசிஐ ,எச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். எனவே இந்த திட்டங்களின் மூலம் அதிக வட்டி விகிதமானது சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையடுத்து சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் இத்திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வருகிற மார்ச் 31-ஆம் தேதியுடன் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது முடிவடைய உள்ளது. ஆகவே இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் சீனியர் சிட்டிசன்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு ஆகும். மேலும் வட்டி விகிதம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 7 – 14 நாட்கள் : 3.3%
- 15 – 45 நாட்கள் : 3.3%
- 46 – 90 நாட்கள் : 4.2%
- 91 – 180 நாட்கள் : 4.2%
- 181 – 270 நாட்கள் : 4.8%
- 271 – 364 நாட்கள் : 4.9%
- 1 ஆண்டு : 5.5%
- 1 ஆண்டு – 400 நாட்கள் : 5.6%
- 400 நாட்கள் – 2 ஆண்டுகள் : 5.6%
- 2 ஆண்டுகள் – 3 ஆண்டுகள் : 5.6%
- 3 ஆண்டுகள் – 5 ஆண்டுகள் : 5.75%
- 5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் : 6.25%