Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக அனைவரும் தங்களுடைய வயதான காலத்தில் ஒரு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு விரும்புவார்கள். இதில் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் விரும்புவது ஃபிக்ஸட் டெபாசிட் தான். இந்த பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கு‌ 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 0.50% வடியும், 5 வருடங்களுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு 0.80% வட்டியும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 6.90% வரை வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |