சீனியர் சிட்டிசன்கள் அனைவரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பல காலங்களாக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் சீனியர் சிட்டிசன்கள் எந்தவித சிரமமும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைவு தான். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என் நிலையில் சீனியர் சிட்டிசன்கள் அனைவருக்கும் அதிக வட்டி வழங்குவதற்காக சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ஆன எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பாங்க் ஆஃப் பரோடா,ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின. இந்தத் திட்டங்கள் தற்போது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மேற்கண்ட வங்கிகளில் சீனியர் சிட்டிசன்களுக்கு எஸ்பிஐ கூடுதலாக 0.80% வட்டி கிடைக்கின்றது. இந்தத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தற்போது நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் எச்டிஎஃப்சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மொத்தமாக 0.75% கூடுதல் வட்டியை வழங்குகின்றது. இந்த வங்கியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75% வட்டி வழங்கப்படுகின்றது. அந்தத் திட்டம் தற்போது அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.