உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் சீனா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. மாறாக ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் காணொளி மூலம் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவ கூடாது. இப்போதைக்கு சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது. நான் நேர்மையாக சொல்வேன் சீனா ரஷியாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது. ரஷ்யாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.