Categories
உலக செய்திகள்

சீனா தடுப்பு மருந்து ”சரியில்லை”… கொரோனாவை கட்டுப்படுத்தாது… அதிர வைத்த முக்கிய ஆய்வு …!!

பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் போடப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்து செயல் அளிக்கவில்லை என்று ஆய்வில் கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 11 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்  25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதோடு புதிய சிக்கலாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரேசில் நாட்டிலும் பரவிவரும் உருமாறிய கொரோனாவுக்கு சீன நாட்டின் தடுப்பு மருந்து பலன் அளிப்பதில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவிடமிருந்து வாங்கிய சினோபார்ம் தடுப்புமருந்து கொரோனாவிற்கு எதிராக செயல்படுகின்றதா ? என்று நடத்தப்பட்ட சோதனையில்  சீன தடுப்பு மருந்து சரியாக பயனளிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. அதே போல ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சைபர், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பு மருந்துகள் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

Categories

Tech |