Categories
உலக செய்திகள்

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்… இன்று பூமியில் விழ வாய்ப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற தகவலை இதுவரை சீனா தெரிவிக்கவில்லை.இந்த நிலையில் இந்த ராக்கெட் ஆனது மீண்டும் பூமிக்கு திரும்பும்போது வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லாக் மார்ச் 5பி ராக்கெட் சுமார் 108 அடி நீளமும் 48,500 பவுண்டுகள் எடையும் கொண்டது. இத்தகைய அளவு கொண்ட ராக்கெட்டில் இருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதுமாக எறியாமல் பூமியில் எங்காவது விழ கூடும்.  இருப்பினும் கடந்த காலகட்டத்தில் சீன ராக்கெட் பாகங்கள் முழுவதும் தெரியாமல் அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. அதேபோல் இந்த முறை மீண்டும் நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இது பற்றி விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தில் ஆலோசகர் டெட் மியூல் ஹாப்ட் பேசும்போது சீனா மீண்டும் இது போல் செயல்படுகிறது.

இதனால் 88 உலக மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது இதனால் 700 கோடி மக்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என கூறியுள்ளார். இருப்பினும் தனிநபர் என வரும்போது இது மிகச் சிறிய அளவிலான ஆபத்தே என விண்வெளி கழகத்தின் நிபுணர்கள் குழு கூறியுள்ளது. இதற்கு முன்பாக இதே போல் சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காண்கிறது. மேலும் இன்று ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா கூறவில்லை என அப்போது மேற்கத்திய மற்றும் ஆசிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |