Categories
உலக செய்திகள்

சீனாவுடனான தற்போதைய நிலை…. பல நாடுகள் இந்தியாவை நம்புகின்றன – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி விட்ட சவாலிணை சந்திக்கக்கூடிய இத்தகைய நேரத்தில், ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். மேலும் சீனா ராணுவத்தினர் ஆரம்பித்த மோதல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாத அணுகுமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பொருட்களை வினியோகம் செய்யும் சங்கிலி தொடர் சீன நாட்டிடம் இருந்து சற்று விலகி இருப்பதை ஆய்வு செய்யவும், தொலைத்தொடர்பு, மருந்து பொருள்கள் விநியோகம் மற்றும் பிற துறைகள் சீன நிறுவனங்களை சேர்ந்து இருப்பதை குறைத்துக்கொள்ள இந்தியாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இத்தகைய நிலையை அடைந்துள்ள இந்தியா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடைய நம்பிக்கையை முழுவதுமாக சம்பாதித்திருக்கின்றது என மைக் பாம்பியோ பெருமிதம் கூறியிருக்கின்றார்.

Categories

Tech |