அமெரிக்க அதிபர் தனது முதல் சந்திப்பில் கனடாவுக்கு உதவுவதாகக் கூறி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் சந்திப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவோடு தொடங்கியுள்ளார். மேலும் காணொலி காட்சி மூலம் கன்னட பிரதமர் மற்றும் பத்திரிகையாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவை எச்சரித்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா சீனா ஹூவாய் தகவல் தொடர்பு நிறுவன தலைமை செயல் அலுவலர் மீது வங்கி மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்திய காரணத்தால் அந்த செயல் அலுவலரை வன்கூவரில் வைத்து கன்னட அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக சீனாவில் பணியாற்றி வந்த இரண்டு கன்னடர்களை வேவு பார்த்ததாக குற்றம்சாட்டி சீனா கைது செய்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் கைது செய்த இரண்டு கன்னடர்களை விடுதலை செய்யுமாறு சீனாவை எச்சரித்து மட்டும் அல்லாமல், அவர்களை பத்திரமாக மீட்க உதவுவதாக கன்னட பிரதமருக்கு வாக்குக் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.