சீனாவில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் உள்ளது.
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகரில் படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. சீனா ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை 40 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையாக அமைக்கும் பணிகளில் பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.