Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா – கடும் கட்டுப்பாடுகள் …!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது.

சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு உகானிலிருந்து கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது பரவத் தொடங்கி உள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இப்போது சீனாவின் லான்ஸ் நகரில் இருந்து தொடங்கி இருப்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த சீன மக்கள் மீண்டும் பதற்றத்துக்கும் கவலைக்கும் ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் பெருகிவரும் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்த சீன அரசு யோசித்து வருகிறது. அதற்காக அத்தியாவசிய பொருட்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்நாட்டு மக்களுக்கு சீன அரசு அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |