Categories
உலக செய்திகள்

சீனாவில் செல்போன் வெடித்து தீக்காயங்கள் ஏற்பட்ட பயங்கரம் ..!!வெளியான பரபரப்பு வீடியோ ..!!

சீனாவில் செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் ஒருவர் தனது பையில் வைத்துள்ள செல்ஃபோன் வெடித்ததில் அவர்மீது தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகளை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பையில் ஏதோ திடீரென்று வெடித்து தீப்பிளம்பு வெளியேறுகிறது. அது அவரின் கை ,இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. மேலும் அவரது தலைமுடி, இமைமுடிகள்  நெருப்பில் பட்டு கருகி  உள்ளது . இதனால் அவர் தனது கையில் வைத்திருந்த பையை தூரமாக எறிந்து விடுகிறார்.

 

இந்த காட்சிகள் அருகில் இருந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது .அந்த செல்போன் 2016 வாங்கியதாகவும் அது சாம்சங் போன் என்றும் உரிமையாளர் கூறியுள்ளார் .

Categories

Tech |