சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் உணவுக்காக பண்டமாற்று முறையை பின்பற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளன. சீனாவில் 3 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து Yuzhou நகரம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முழு ஊரடங்கால் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் ஷியான் நகரத்தில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பண்டமாற்று முறையை உள்ளூர் நிர்வாகமே மக்களுக்கு அளித்து வருகிறது.
இவ்வாறான பண்டமாற்று முறை பின்பற்ற பட்ட போதிலும் மக்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ள உள்ளூர் நிர்வாகம் மக்கள் நலமுடன் தான் இருக்கின்றனர் என செய்திகள் வெளியிட்டு வருகிறது. 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷியான் நகரத்தில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் 1600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.