பிஜிங் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன நிலநடுக்க மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 17 கி.மீ. ஆழம் கொண்டு 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களுக்கு பிறகு யானிலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று சின்ஹீவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
அதுமட்டுமில்லாமல் வீடுகள் சேதம் அடைந்துள்ளது என்று அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் 14 பேர் காயமடைந்து உள்ளனர். அதில் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிச்சுவான் மாகாணத்திலுள்ள பாக்சிங் கவுண்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தண்டவாளத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பணிகளில் ரயிலில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு தென்மேற்கு ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.