ரஷ்யாவிற்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கண்டித்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த சர்வதேச தடைகளை நீக்க ரஷ்யாவிற்கு உதவும் பட்சத்தில் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்யாவுக்கு உதவுவதால் சீனா தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கொள்கிறது. நாளொன்றுக்கு சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சுமார் 2 பில்லியன் யூரோ அளவிலான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. போர் நீடிப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் சீர்குலைவை யாரும் விரும்பவில்லை.!” என அவர் பதிவிட்டுள்ளார்.