அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர் பெயர்களை இஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டு வருகிறது. இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனா செய்து வருகிறது.
சீனாவின் இந்த செயலிற்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம்பாகி பேசுகையில், பெயர்களை மட்டும் மாற்றி கூறுவதால் அருணாச்சல பிரதேச மாநிலம் சீனாவுக்கு சொந்தமானதாக மாறிவிடாது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்த உண்மையை சீனாவால் ஒருபோதும் மறுக்க முடியாது. அருணாச்சல பிரதேச மாநில பெயர்களை தனது மொழிகளில் வேறு மாதிரி சீனா பெயர்சூட்டி வருவது குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது முதல்முறை அல்ல. இது மாதிரி செயலில் சீனா 2017-ஆம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அருணாச்சலப்பிரதேச வரைபடத்தில் உள்ள 15 ஊர்களின் பெயரை நேற்று சீனா மாற்றியுள்ளது. இந்த பெயர்களை பயன்படுத்த வேண்டும் என்று தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஜாங்னான் என்று பெயர் சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று தான் சீனா அழைத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.