ஆசிய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் வருடம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்ததாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலமாக இணைத்துக்கொள்ளும். மேலும் சீனாவிற்கும் பெருநாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் அதே போல கடல் வழியை போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்களுடன் இணைக்கும்.
இதன் மூலமாக எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த வளரும் நாடுகளுக்கு சீனா கடன் அளித்து வருகின்றது. இந்த சூழலில் சீனாவின் கடன் வழங்கும் முறையை வங்கதேசத்தின் நிதி மந்திரி முஸ்தபா கமல் விமர்சனம் செய்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, சீனா தனது கடன்களை மதிப்பிடுவதற்கு மிகவும் வலுவான செயல்முறையை பின்பற்றுகிறது. ஒரு திட்டத்திற்கு கடன் பெறுவது முன் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் வளரும் நாடுகள் சீனாவின் இந்த திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன்னர் ஒரு முறை இருமுறை யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார்.