Categories
உலக செய்திகள்

சீனர்களே…. மூன்று குழந்தைகள் கட்டாயம்…. தம்பதிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. இரண்டாவது குழந்தைகளை கட்டாயமாக கலைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் சீனாவில் கோடிக்கணக்கான கருக்கலைக்கப்பட்டு, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரிய தொடங்கியது. இதனால் வரும் காலத்தில் தொழில் துறைக்கு தேவையான மனித சக்தி இல்லாமல் போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை சீனா கைவிட்டு தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் ,தொகையில் வளர்ச்சி காணாத நிலையில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக மானியமும் சலுகைகளும் சீன அரசு வழங்கி வந்தது. அதன்படி குழந்தைகளை பராமரிப்பதற்காக வங்கியில் குறைந்த வட்டியில் கடன் என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இவை அனைத்தும் சீன இளைஞர்களால் கவரவில்லை. கொரோனா ஊரடங்கு, பொருளாதார நிலை மற்றும் கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. அதுமட்டுமில்லாமல் சீன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சீன மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை சீனாவின் தேசிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிக்க சீன இளைஞர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு தம்பதியினர் குறைந்தது மூன்று குழந்தைகளைப் கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |