Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரமானியம், பயிர்காப்பீடு ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |