Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் ஸ்டாலின் அழைக்கட்டும்… ”முதல் கட்சியா பாஜக வரும்”… சவால் விட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதல்வருக்கு, தமிழக பாஜக சார்பாக எங்களின் வேண்டுகோள், ஆளுநர் அளித்த கேள்வி கேட்டு முழு பதிலையும் அனுப்பிவிட்டு,  டேட்டாவை சொல்லிவிட்டு,  முதலமைச்சர் அவர்கள் எப்போது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிறாரோ,  அன்றைய தினம்  தமிழக பாரதிய ஜனதா கட்சி முதல் கட்சியாக அந்த  கூட்டத்தில் இருக்கும்.

ஏனென்றால் தமிழக மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும். நீட்டை பற்றிய உண்மை தெரிய வேண்டும். எவ்வளவு பேர் பாஸ் ஆகி இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வேண்டும். எவ்வளவு பேர் எந்த ஸ்கூலில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை சொன்னீர்கள் என்றால் நீங்கள் சமூகநீதியின் பெரிய போராளி என்று ஒத்துக் கொள்கின்றேன்.

அதனால் தயவு செய்து அரசியல் காரணத்திற்காக நீட்டைப் பற்றி உங்களுடைய நிலைப்பாடு முற்றிலும் தவறானது. அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடையாது. உண்மையான சமூக நீதி என்பது எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கணும். அதுதான் உண்மையான சமூக நீதி. தனியார் மெடிக்கல் கல்லூரிகளுக்கு  கிடைக்க வேண்டும் என நினைப்பது சமூக நீதி இல்லை,  அது குடும்ப ஆட்சி என விமர்சித்தார்.

Categories

Tech |