சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தில் அதிதியையை நடிக்க வைக்க இதுதான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தில் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயனும் சங்கரும் ஒரே ஜாதி என்பதால் தான் சிவகார்த்திகேயன் தனது படத்தில் அதிதியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறி இருக்கின்றார்.