படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் விஜய் சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அருண் விஜய். சிறுவயதிலேயே நடிக்க வந்து இவர் தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். கூடிய விரைவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் அருண்விஜய் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றார்.
இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அருண் விஜய்யிடம் சிவகார்த்திகேயன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக சிவகார்த்திகேயனுக்கும் அருண் விஜய்க்கும் இடையே பிரச்சனை இருப்பதாக இணையத்தில் தகவல் சில வருடங்களாகவே பரவி வருகின்றது. ஆகையால் அருண் விஜயிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்ட பொழுது அவர் கூறியதாவது, எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. என் திரைப்படத்தின் டிரைலரையே சிவகார்த்திகேயன் தான் வெளியிட்டார். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.