சிவகார்த்திகேயனின் 22-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கின்றார். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்த நிலையில் அண்மையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகின்றது.
சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் எஸ் கே 20 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே 21 படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து மடோனே அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே 22 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.