Categories
சினிமா

சிவகார்த்திகேயனின் பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் “பிரின்ஸ்”. இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. பிம்பிலிக்கி பிலாப்பி என்ற இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். அனிருத் ரவிச் சந்தர், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி போன்றோர் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |