சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது.
பிரசித்தி பெற்ற சுப்ரமணியன் சுவாமி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விஸ்வநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 19-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. கோவில் விழாவை முன்னிட்டு முருகருக்கு அலங்காரமும், அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தினமும் இரவு ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
கோவில் விழாவில் திருக்கல்யாணம் 26-ம் தேதியும் தேரோட்டம் 27-ஆம் தேதியும், தீர்த்தவாரி 28-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான ஊழியர்கள், கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தனர்.