Categories
சினிமா தமிழ் சினிமா

சில அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கண்டனம்…!!!

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களத்தில் சில அரசியல் கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் அது குறித்து அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது.

Related image

இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சில அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கு இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |