Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மறதியால் ஏற்பட்ட சோகம்.. சிலிண்டர் வெடித்து விபத்து… மூதாட்டி உயிரிழப்பு…!!

நியாபக மறதியால் செய்த தவறில்  சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும்  பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும்  என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர்  சரியாக வேலை செய்யவவில்லை.

இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. இதை கவனிக்காத யமுனா மீண்டும் வந்து வத்திக்குச்சியை வைத்து பற்ற வைக்கும் போது கியாஸ் வெடித்து வீடு முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் யமுனாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் யமுனா மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு யமுனா சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

 

 

Categories

Tech |