கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியைச் சுற்றி மக்கள் நுழைய தடை விதித்து இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அத்துடன் அப்பகுதியை சுற்றியுள்ள கடைகளை திறக்கவும் தடை விதித்துள்ளனர். இதனிடையில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளனர்.