சமையல் சிலிண்டர் உயர்வுக்கு மாநில அரசு தான் காரணமா? மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக கூறப்படுவது உண்மையா? இதில் தெரிந்து கொள்வோம்.
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்த பிரச்சினை தாண்டி தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக வந்து நிற்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 900 ரூபாய் வரை உள்ளது. விரைவில் 1000 ரூபாயை நெருங்க வாய்ப்பு உள்ளதாக இல்லத்தரசிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
சமையல் சிலிண்டர் விலைக்கு மாநில அரசும், அதற்கான வழியும் காரணம் என்ற செய்தி பரவி வருகிறது. மேலும் சமையல் சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், மத்திய அரசு 5% வரி விதிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் இது குறித்து ஆராய்ந்து பார்த்தால் மாநில அரசு அவ்வளவு வரி விதிப்பது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே சமையல் எரிவாயு ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கு 5% மட்டுமே வசூல் செய்யப்படும். இதில் மத்திய அரசுக்கு 2.5 சதவீதமும், மாநில அரசு 2.5% வரி ஆகும். எனவே 55 சதவீத வரியை மாநில அரசு விதிக்கின்றது என்ற செய்தி பொய்யானது. சிலிண்டர் விலை அதிகமாக இருந்தாலும் அரசு தரப்பிலிருந்து சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.