கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர்.
சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை கண்டித்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அண்மையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.