காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமதுஷா என்ற பிரிவினைவாத தலைவர் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட அகமதுஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சிறை கைதியாக அகமதுஷா உயிரிழந்த தகவலை அவரது மகள் உறுதிசெய்துள்ளார்.