கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் புழல் சிறையில் இருக்கிறார். குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு தேவையுள்ள வசதிகளை செய்து கொடுப்பதற்காக, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
Categories
சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வாழ்க்கை…. லஞ்சம் கேட்ட அதிகாரி?… பரபரப்பு….!!!!
