Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறையில் கொசுக்கடி…. அதீத மன உளைச்சல்…. ஜெயக்குமாரின் பரிதாப நிலை….!!!!

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி அதிமுகவினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு முன்னாள் அமைச்சர் என்பதைக் கருத்தில்கொண்டு முதல் பிரிவு அறையை ஒதுக்க கேட்டபோது, சிறைத் துறையினர் தர மறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அறையை ஒதுக்காததால் ஜெயக்குமார் சிறையில் கொசுக்கடியில் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் திடீரென கைதானதால் மன உளைச்சலில் இரவு நேரத்தில் மாத்திரைகளை சாப்பிடவில்லை. மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவர சிறைக் காவலர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு விசாரணை இன்று நடைபெறுகிறது.

Categories

Tech |