சிறையில் ஒரு நாள் கைதியாக வாழவேண்டும் என்று யாருக்காவது ஆசை உள்ளதா? தற்போது கர்நாடகாவில் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணைக் கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என்று 500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் சிறை கைதியாக வாழமுடியும். இதுகுறித்து அந்த சிறையின் அதிகாரி தெரிவித்துள்ளதாவது: சிறையில் வாழ விரும்புபவர்கள் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறைக்கைதியாக வாழலாம். இதற்காக அரசின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறோம்.
இங்கு வருபவர்களுக்கு சீருடை, கைதியின், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் அனைத்தும் வழங்கப்படும். அவர்களும் கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும். கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.